Editorial / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஜனாதிபதி ஒருவர் நாட்டு மக்களால் தெரிவு செய்யப்படுவராக இருந்தால் அவருக்கு நிறைவேற்று அதிகாரங்கள் காணப்பட வேண்டுமென தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சியால் முன்வைக்கப்படும் விமர்சனங்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், மேலும் அரசமைப்புப் பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை ஜனாதிபதியால் கூட பதவி விலக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், அவர்கள் தற்போதும் அந்தப் பதவிகளிலேயே தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களைத் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் கூறிய அவர், கடந்த ஆட்சிக்காலத்திலேயே நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தனவெனவும், கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட ஜனநாயக விரோதாச் செயற்பாடுகள் தொடர்பில் இப்போது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் எவரும் வாய் திறக்கவில்லை எனவும் கூறினார்.
9 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 Dec 2025