2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

விருந்துபசாரம் குறித்துக் கேள்வி

Editorial   / 2021 பெப்ரவரி 26 , மு.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கடந்தகாலங்களில் பின்பற்றிவந்த பாராம்பரியங்களைப் பின்பற்றி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜனாதிபதி விருந்துபசாரம் அளிக்காமையானது ஏன் எனக் கேள்வியெழுப்பிய ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, வெளிநாட்டு அச்சுறுத்தல் காரணமாகவா பாராம்பரியம் மீறப்பட்டது என வினவினார்.

கொள்ளுப்பிட்டியில் நேற்று (25) நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப், இலங்கை வந்தபோது, அப்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் தனித் தனியே அவருக்கு விருந்துபசாரம் வழங்கினர் .


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தின் பர்வேஷ் முஷாரப் இலங்கை வந்திருந்தபோதும், அவ்வாறே ஜனாதிபதி தனியாகவும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தனியாகவும்  விருந்துபசாரம் வழங்கினர் என்றார். 

நாட்டுக்கு வருகைதரும் அரச தலைவர்களுக்கு, இவ்வாறு விருந்தளிப்பது பாராம்பரிய நிகழ்வொன்றாகும் எனக் குறிப்பிட்ட அவர், பாகிஸ்தான் பிரதமருக்கு, பிரதமர் மஹிந்த மாத்திரமே விருந்தளித்துள்ளார் என்றார்.


மேற்படி விருந்துபசாரத்தில் 150 பேர் மாத்திரமே பங்கேற்றுள்ளனர். 200 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு இம்ரான் கானைச் சந்திக்க வாய்ப்பளிக்காமை பிரச்சினைக்குரிய விடயம் எனவும் வஜித அபேவர்தன தெரிவித்தார்.
   
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .