Gavitha / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருவதாக கூறி, சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை நம்பவேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த பணியகம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பலர் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றப்புலனாய்வுப் திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த விளம்பரங்கள் சட்டரீதியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் மின்னணு ஊடகம், பத்திரிக்கைகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படும்.
எனவே, சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்ப வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுத்தியுள்ளது.
12 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
32 minute ago