2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

வெள்ளவத்தை விபத்து : ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

J.A. George   / 2021 மார்ச் 06 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை − மெரின் டிரைவ் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 5.45 மணியளவில் இரவு விடுதியில் இருந்து மது போதையில் வாகனம் செலுத்திய நபரால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், காரின் சாரதி மற்றும் வாகனத்தில் பயணித்த மற்றுமொரு போதையில் இருந்த  நபர் ஆகியோர் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்று மதுபோதையில் வீடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 தற்போது, காயமடைந்த மூவரும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .