2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

வௌ்ளவத்தை, ஹட்டனில் கொரோனா மரணங்கள் பதிவு

J.A. George   / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 10 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில்,  நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளன.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொலன்னாவை பகுதியை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். 

இதேவேளை, வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருக்கு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதன்பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். 

களுத்துறை பகுதியை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் கடந்த 16 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார். 

வஸ்கடுவை பகுதியை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 16 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார். 

பிபிலை பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்தார்.

குருத்தலாவை பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவருக்கு பதுளை போதனா வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். 

இதேவேளை, பிட கோட்டே பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுபதிக்கப்பட்ட போது கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்தார்.

குடால்கமுவ பகுதியை சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்தார்.

இரத்மலானை பகுதியை சேர்ந்த 90 வயதுடைய ஆண் ஒருவர் குருநாகல் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட் 19 தொற்றுறுதியாகிருப்பது கண்டறியப்பட்டது.

ஹட்டன் பகுதியை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் தேசிய தொற்று நோயியல் நிருவனத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .