2020 ஏப்ரல் 04, சனிக்கிழமை

வழமைக்கு திரும்பியது மலையக ரயில் சேவை

Editorial   / 2019 டிசெம்பர் 08 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்    

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்கு பின்னர், நேற்று (07) வழமைக்கு திரும்பியுள்ளதாக பண்டாரவளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

 தியத்தலாவ மற்றும் பண்டாரவளை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ஒபாட எல்ல பகுதியில் 04ஆம் திகதி  இரவு ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்திருந்தன.

ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து, தற்போது ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாக பண்டாரவளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

எனினும், சீரற்ற காலநிலை தொடர்வதனால் மண்சரிவு அபாயம் இருப்பதாகவும், மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .