2024 மே 03, வெள்ளிக்கிழமை

விஜயகலாவிடம் 3 மணிநேரம் விசாரணை

Editorial   / 2018 ஜூலை 24 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டுமென உரையாற்றிய சிறுவர் மற்றும் மகளிர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் நேற்றைய தினம் (24) திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான பிரிவு 3 மணி நேரம் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, தான் ஐக்கிய தேசியக் கட்சியை ஊக்குவிக்கவே தவிர விடுதலைப் புலிகள் அமைப்பின் மீளெழுச்சி பற்றி உரையாற்றவில்லையென்றும், குறித்த உரை கடுமையானதொன்றென தான் உணர்ந்தது குறித்த உரையின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னரென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா தெரிவித்திருப்பதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களால் தான் மிகவும் வேதனையடைந்திருந்ததாகவும், இந்த மனநிலையிலேயே அன்று உரையாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊக்குவிப்பு தொடர்பிலேயே பேசியதாகவும், இந்த உரை பிரபலமானவுடன் அதன் பாரதூரம் குறித்து உணர்ந்துக் கொண்டதாகவும் விஜயகலா குறிப்பிட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றிய நிகழ்வில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடமும் வாக்குமுலம் பெறுவதற்காக திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான பிரிவு சபாநாயகர் கருஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .