2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

விரிவுரைகளிலிருந்து விலகியுள்ள பேராசிரியர்கள்

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனித பண்பியல், சமூக விஞ்ஞானப் பீடத்தின் சகல பேராசிரியர்களும் தமது விரிவுரை நடவடிக்கைகளிலிருந்து விலகியுள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் பகடிவதைக்கு எதிராக செயற்பட்ட மாணவரொருவர் மீது மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, பேராசிரியர்கள் விரிவுரை நடவடிக்கைகளிலிருந்து விலகியிருப்பதாகத்,  குறித்தப் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் தமர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு நுகேகொட விஜேராம சந்தியில் வைத்து, 5 மாணவர்களால் குநித்த மாணவர் தாக்கப்பட்டு, களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் ஐவரும் பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று பிரிவில் முன்னிலையாகும் வரை தாம் விரிவுரை நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .