2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

வீடொன்றுக்கு தீ வைத்த 10 வயது சிறுவன் கைது; மாத்தறையில் சம்பவம்

Super User   / 2010 மே 28 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறையில் வீடொன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 வயதுச் சிறுவன் தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளான்.

கொலைச் சம்பவமொன்றில் ஏற்பட்டிருந்த முன் விரோதம் காரணமாக, பழிவாங்கும் எண்ணத்துடன்  வீட்டிற்கு தீ வைக்குமாறு குறித்த சிறுவனிடம்,
பெண்ணொருவர் தூண்டியதாக விசாரணைகளில் ஈடுபட்டுள்ள  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த பெண்மணி கைது செய்யப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0

 • xlntgson Saturday, 29 May 2010 09:26 PM

  சிறுவர்களை வைத்து பக்கத்துவீட்டுக்காரர்களுக்கு அநியாயம் செய்வது வளர்ப்பு பிராணிகளில் மட்டுமல்ல கிணற்றுநீரில் அசுத்தத்தைகலப்பது வரை ஊத்தை குப்பை கூளங்களை வளவில் எறிவது வரை தொடர்கிறது பல இடங்களில். கூரை மீது எதையாவது வீசியடிப்பது வாசற்கதவை திறக்கவிடாவண்ணம் வாகனங்களை அடித்து வைப்பது பந்து விளையாடும் சாட்டில் யன்னல் கண்ணாடிகளை உடைத்தல் போன்று தொடர்கிறது. மனிதர் மனதில் பொறாமையும் பெருமையும் குடிகொண்டுவிட்டது. வம்பு இழுப்பதில் ஆனந்தம் அடைவதும் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது

  Reply : 0       0

  xlntgson Wednesday, 02 June 2010 09:01 PM

  பணபல புஜபல ஆள்பல, செல்வாக்கை காட்ட எளிதில் மனிதர்கள் யாரையும் பகைத்துக்கொள்ள விரும்புகின்றனர். மனிதநேயம் வெறும் பேச்சு! இனத்தவருக்கே அல்லது தனதுகுடும்பத்துக்கு மட்டுமே என்றாகிவிட்டது. பேச முயன்றால் குற்றம் பேசாதிருந்தால் குற்றம் என்றாகிவிட்டது 'மிஸ் கால்' ஏன் கொடுத்தாய் என்று ஒருகொலை கூட நடந்திருக்கிறது. தனக்கு வேண்டாதஅழைப்புகளை தவிர்க்கவே இந்த செலவில்லாத 'மிஸ்கால்' இருக்கிறது வேண்டாத'கால்' என்றால் தடுக்க ஒருஇலேசான வழியும் இருக்கையில் ஒவ்வாமை எவ்வளவு தூரம் வியாபித்திருக்கிறது!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--