2020 மே 25, திங்கட்கிழமை

’வேட்பாளரை செயற்குழு தீர்மானிக்கும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவது கட்சியின் செயற்குழுவின் தீர்மானத்துக்கு அமையவே” என, நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகைளில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற நிலையில் அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும், தமது கட்சியினருக்கு எந்தவித குழப்பமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 4 வருடங்களாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதா? என்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியினருடன் கலந்துரையாடி வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால், ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவதாக என்பது தொடர்பில் கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் என்றும் அதன் தீர்மானத்துக்கு அமைய ரணில், கரு, சஜித் என, யார் போட்டியிடுவது என்பது குறித்து கலந்துரையாடி தேர்தலுக்கு செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X