2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ஷங்கரிலா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா

Kogilavani   / 2020 ஒக்டோபர் 25 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள ஷங்கரிலா ஹோட்டல் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான முழுமையான அறிக்கையொன்றை ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

'எமது விருந்தினர்கள், சக ஊழியர்களின் உடல்நலம்  நல்வாழ்வுக்கு நாம் முன்னுரிமை அளிப்பதால், இலங்கையின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, எமது ஊழியர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை எனினும் அவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--