2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

ஹட்டனில் பிரபல பாடசாலைக்குப் பூட்டு

Kogilavani   / 2021 ஜனவரி 27 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் நகரிலுள்ள இரு பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து பாடசாலையொன்றும் ஹட்டன் வலய கல்விப் பணிமனையும் மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

11 மாணவர்கள் இரு ஆசிரியர்களுக்கே, தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 
கடந்த வாரம், தரம் 9ஐச் சேர்ந்த மாணவன் ஒருவர், சுகவீனம் காரணமாக டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மேற்காள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிபடுத்தப்பட்டது. 

தொற்றுக்குள்ளான மாணவனோடு தொடர்பைப் பேணி வந்த ஆசிரியர்கள் 14 பேர் உள்ளடங்களாக 34 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கை, நேற்று முன்தினம் (26) வெளியானபோதே, 13 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

13 பேரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .