2021 மார்ச் 03, புதன்கிழமை

ஹட்டன் பன்மூர் லயன் அறைக்குள் நாகப்பாம்பு

Editorial   / 2021 ஜனவரி 27 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் பன்மூர் தோட்ட ​​தொழிலாளர் லயன் அறையின் குடியிருப்பு ஒன்றுக்குள் நாகப்பாம்பு இருந்துள்ளது.

சுமார் 2 அடி நீலமான பாம்பொன்று அறையினுள் இருந்துள்ளது. அதனை நேற்று செவ்வாய்க்கிழமை பகல் 11 மணியளவில் கண்ட வீட்டின் உரிமையாளர், கம்​பொன்றை எடுத்து, அப்பாம்பை விரட்டுவதற்கு முயற்சித்துள்ளார்.

எனினும், அப்பாம்பு தனது தலையைத் தூக்கி படமெடுத்து காண்பித்துள்ளது. அதன்பின்னர், பிளாஸ்டிக் வாளியொன்றுக்குள் பாம்பை பிடித்து, ஹட்டன் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும் அறிவித்துள்ளார். தகவல்:ஆர்.ராஜேஸ்வரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .