2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

ஹெரோய்ன் விநியோகத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஜெயரட்னம்

பனாகொடை இராணுவ முகாமில் விசேட அவசரகால பணிகளில் ஈடுபடுவருதாகக்கூறி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி  ஹெரோய்ன் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட   இராணுவ வீரர் ஒருவரை, களுத்துறை வலய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், இன்று(28)  கைதுசெய்துள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் ஒன்றின் அடிப்படையில், களுத்துறை- ரஜவத்தை சந்தியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸார், குறித்த நபரை கைதுசெய்துள்ளனர். 

சந்தேகநபர் முகக்கவசத்தில் மறைத்துக் கொண்டுச் சென்ற 10 கிராம் நிறையுடைய  ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X