2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

13 குறித்து கலந்துரையாட வேண்டும்: ஜப்பான்

Super User   / 2013 ஜூலை 29 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-றிப்தி அலி


13ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும் என ஜப்பானின் உள்நாட்டு அலுவல்கள், தொடர்பாடல் அமைச்சர் யொஷpத்தகா ஷpன்டோ தெரிவித்தார்.

இது ஒரு நாட்டின் அரசியலமைப்பில் உள்ள விடயமாகும். இதனால் குறித்த நாடே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த சட்டமூலம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கலந்துரையாடல்கள் அமைச்சரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ இடம்பெற வேண்டும் என ஜப்பானிய அமைச்சர் குறிப்பிட்டார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் உள்நாட்டு அலுவல்கள், தொடர்பாடல் அமைச்சர் யொஷpத்தகா ஷpன்டோ,  கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டார்.

இதன்போது 13ஆவது திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளரொருவர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜப்பானிய தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தினை மேம்படுத்துவதே எனது விஜயத்தின் பிரதான நோக்கமாகும். இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் பேச்சு நடத்தியுள்ளேன்.

மிக விரைவில் இது தொடர்பான ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது. எனினும் இதற்காக ஒதுக்கப்படவுள்ள நிதி, இதுவரைக்கும் தீர்மானிக்கப்படவில்லை. இந்த உதவிகள் கல்வி, நிதி, மேம்படுத்தல் என பல வகையில் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் பொருளாதார தொடர்புகளை மேலும் வளர்ப்பதற்கு இலங்கையும் ஜப்பானும் கவனம் செலுத்துகின்றன' என்றார்.

இதேவேளை, ஜப்பானின் அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது தொடர்பாடல்துறை உள்ளிட்ட பொருளாதார தொடர்புகளை மேலும் வளர்த்துக்கொள்ளக்கூடிய புதிய மார்க்கங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

 
2011ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது இலங்கையில் இருந்து கிடைத்த ஒத்துழைப்புக்கு தனது நன்றியை தெரிவித்த ஜப்பானிய அமைச்சர், ஜப்பான் மக்கள் அதை பெரிதும் மதிப்பதாக தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதத்தில் ஜப்பானில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ராஜபக்ஷ, ஜப்பான் பிரதம அமைச்சர் ஷpன்சோ அபே அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

இலங்கைக்கு 57.8 பில்லியன் அபிவிருத்தி உதவியை வழங்குவதற்கு அப்பொழுது ஜப்பான் அரசு உறுதி வழங்கியிருந்தது. அதன் பின்னர் ஜப்பானின் உயர் மட்ட அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த மே மாதம் ஜப்பான் துணை பிரதமர் தாரோ அசோ இலங்கைக்கு விஜயம் செய்தபோது ஜனாதிபதி ராஜபக்ஷவையும் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத், வெளிவிவகார அமைச்சின் பதில் ; செயலாளர் nஷனுக்கா செனவிரத்ன, ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் ரியர் அட்மிரல் (ஓய்வு பெற்றவர்) வசந்த கரன்னாகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.  Comments - 0

  • vaarisu. Monday, 29 July 2013 04:49 PM

    ஐயா ஜப்பாகாராளேய்... இந்த 13க்குள்ளே என்ன இருக்கு என்று கண்டு பிடிக்க ஒங்கட நாட்டு விஞ்ஞானி ரெண்டு பேரை எங்கட நாட்டுக்கு வரச் சொல்லுங்களேன்..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--