2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

சார்ள்ஸ் 14 ஆம் திகதி வருகைதருவார்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 15 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இளவரசர் சார்ள்ஸ் மற்றும் கமிலா ஆகியோர் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் இன்று அறிவித்தன.

இவர்கள் அடுத்த மாதம் இலங்கை வரமுன்னர் இந்தியாவில் 9 நாட்கள் தங்கியிருப்பர்.

மகாராணியின் சார்பில் மாநாட்டில் கலந்து கொள்ளும் இளவரசர் சார்ள்ஸ் மாநாட்டுக்கு புறம்பான நிகழ்வுகளிலும் தனது மனைவி காமிலா சகிதம் பங்குபற்றுவார். இவற்றில் மனநோய் வைத்தியசாலை, பொது வைத்தியசாலை தேயிலை தோட்டம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்தலும் அடங்குகின்றது.

இளவரசர் சார்ள்ஸ் 1998இல் 2005இல் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். காமிலாவுக்கு இது இலங்கைக்கான முதலாவது விஜயமாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--