2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

மஹியங்கனையில் 300 சிறுமிகளுக்கு சட்டவிரோத திருமணம் என முறைப்பாடு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை, ரிதீமாலியத்தை பகுதியைச் சேர்ந்த 300 சிறுமிகளுக்கு சட்டவிரோதமான முறையில் திருமணம் செய்து வைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்றை குறித்த பிரதேசத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரும் சட்டத்தரணியுமான அனோமா திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமிகளை திருமணம் செய்துகொண்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சிறுவயதினருக்கு திருமணம் செய்து வைத்ததாகக் கூறப்படும் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த விவாகப் பதிவாளர்கள் 20 பேர் ஜனாதிபதியின் அனுமதியின் பேரில் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(LD)


  Comments - 0

  • xlntgson Tuesday, 12 October 2010 09:07 PM

    வாகரையில் வேடர்கள் மகியங்கனை வேடர்களுடன் முதன்முறையாக இணைந்து வேடர்கள் தினத்தை கொண்டாடினராம். ஆனால் அவர்களது அநேகமான பழக்க வழக்கங்களை கேவலப்படுத்துவது மிகவும் அநாகரிகமானது. நாகரிகத்தின் பெயரால் நடக்கும் காதல் கூத்துகளையும். அருகிவரும் இந்த எளிய இயற்கையோடு இணைந்த இனம் அனுபவிக்க நேரிடுமோ அறிமுக அட்டை இல்லாதவர்களை வாக்களிக்க அனுமதித்தார்களே திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டார்களோ பிரச்சினை இல்லாமல் வாழ்கின்றவர்களை பிரித்து வைக்கும் வக்கிரமான சட்டம் என்ன சட்டம்? பொது வழக்கு பேசும் வழக்கறிஞர் கவனத்துக்கு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .