2020 நவம்பர் 28, சனிக்கிழமை

கடந்த வருடம் 84,605 கிலோ கஞ்சா பறிமுதல்

Super User   / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

நாட்டில் கடந்த வருடம் 84,605 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெட்டி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

மேலும், நாட்டில் ஆயுர்வேத மருத்துவத் தேவைகளுக்காக 205 கிலோகிராம் மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் மாத்திரம் கஞ்சா தொடர்பான குற்றங்களில் 13,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 23 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர் எனவும் சுனில் ஹந்துன்னெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


"திஸ்ஸமஹரகம மற்றும் வெள்ளவாய பகுதியில் கஞ்சா பயிரிடப்படுவது எமக்குத் தெரியும். அவை எவ்வித பிரச்சினையுமன்றி  பல சோதனைச் சாவடிகளைக் கடந்து கொழும்புக்கு கொண்டு வரப்படுகின்றன" என அவர் கூறினார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்க, சில ஆளும் கட்சி அரசியல்வாதிகள் போதைப் பொருள் நடவடிக்கையில் ஈடுபடுவதால் 'குடு' என அடையாளப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.
 


  Comments - 0

  • bish Thursday, 19 August 2010 06:01 PM

    பறிக்கப்பட்டது இவ்வளவு என்றால், பாவிக்கப்பட்டது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--