2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் தந்தை பலி; தாய் காயம்; குளத்தில் விழுந்த 9 மாத குழந்தை மாயம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 18 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காஞ்சன குமார)

இன்று வியாழக்கிழமை நண்பகல் தம்புள்ளை பிரதேசத்தில் மோட்டர் சைக்கிளுடன் பேருந்தொன்று மோதிய விபத்தில் பெண்ணொருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குளத்திற்குள் விழுந்துள்ள அவரது 9 மாத குழந்தை காணாமல் போயுள்ளது.

மேற்படி குழந்தையும் அதனது பெற்றோரும் கந்தளம் குளத்துக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி குளத்து நீரில் மூழ்கியுள்ளது.

இந்த விபத்தினால் குறித்த குழந்தையின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குளத்தில் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ள 9 மாத குழந்தையை தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--