2026 ஜனவரி 03, சனிக்கிழமை

‘2 நாட்களில் தெரியும்’

A.Kanagaraj   / 2017 ஜூலை 27 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜபக்ஷர்களை கைதுசெய்வதைத் தடுக்கும் முயற்சியே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், என்ன நடக்கப்போகின்றது என்பது தொடர்பில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் தெரியுமென, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், “ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை முழுமையாக மூடிவிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடிவிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

“கடந்த ஆட்சியின்போது, மேற்கொள்ளப்பட்ட அரச சொத்துகள் மோசடி தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து வருகின்ற நிலையில், தங்களைக் கைதுசெய்வதைத் தடுப்பதற்கே, அவ்வாறானவர்கள் தேரர்களின் ஊடாக முயற்சிக்கின்றனர்” என்றார். 

குறுக்கிட்ட ஊடகவியலாளர், அவ்வாறானவர்கள் என்றால் யாரென்றார்? அவர்கள்தான், தேசப்பற்றாளர்கள் என்று பதிலளித்தார்.  

இதேவேளை, முடிவெடுப்பதில் அரசாங்கத்துக்கு, முதுகெலும்பு இல்லையென குற்றம் சுமத்துக்கின்றனரே, என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித, “நல்ல கேள்வி... நல்ல கேள்வி... அதுதான், நேற்று முதல், முதுகெலும்புள்ள நடவடிக்கையை எடுத்துள்ளோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X