2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

2 வருடங்களின் பின் மீண்டும் புதுக்குளம் ஐயனார் கோவில் பொங்கல் விழா

Suganthini Ratnam   / 2010 ஜூலை 12 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் புதுக்குளம் நொங்குவெட்டி ஐயனார் கோவில் வருடாந்த பொங்கல் விழா 2 வருடங்களுக்கு பின் இம்முறை வெகு விமரிசையாக இடம்பெறவுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை இரவு பூசைகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி புதன்கிழமை பகல் இரவாக பொங்கல்த் திருவிழா இடம்பெற்று 15ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு திருவிழா நிறைவடையும்.

இந்த பொங்கல் நிகழ்வில் 14ஆம் திகதி பகல் இரவாக பாற்செம்பு, தீச்சட்டி, பாற்காவடி, செடில்காவடி, தீமிதித்தல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவிருப்பதாக நொங்குவெட்டி ஐயனார் கோவில் பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

இந்த விழாவில் சுமார் 10,000 பேர் வரை கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X