2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

20 சட்டமானது

Gavitha   / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையுடன் இம்மாதம் 22ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை உறுதிப்படுத்துவதற்கான கையொப்பத்தை,  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இட்டார்.

சபாநாயகர் அலுவலகத்தில், நேற்று (29) முற்பகல், அரசமைப்புத் திருத்தத்துக்கான சான்றுரைப்படுத்தலில், சபாநாயகர் கையொப்பமிட்டாரென, நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

இதன்படி, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் நேற்று முதல் முழுமையாக அமலாகிறது.

திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்படி திருத்தச் சட்டம், சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு, வரைவுக்கான அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம், அத்திணைக்களத்தால் நாடாளுன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அதில் சபாநாயகர் கையெழுத்திடுள்ளார்.

இதன்படி, நேற்று முதல், அரசமைப்புப் பேரவை இரத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .