Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஏ ஜயசேகர)
ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கை இழந்தமைக்கு தொழிலாளர்கள் உரிமை மீறல்கள் எதுவும் காரணம் இல்லை எனவும் மாறாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினரின் பிரசாரங்களே இதற்குக் காரணம் எனவும் அரசாங்கம் கூறியுள்ளது.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"சுனாமியின் பின்னர் 2005 ஆம் ஆண்டிலிருந்து 5 வருட காலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இலங்கைக்கு கிடைத்து வந்தது. ரணில், மங்கள மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவும் கனவிலுள்ள சில தமிழ்க் குழுக்கள் ஆகியனவற்றின் அரசாங்கத்திற்கு எதிரான சேறுபூசும் பிரசாரங்களின் பின்னரே தொழிலாளர் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி கேட்க ஆரம்பித்தது.
சரத் பொன்சேகாவின் வெள்ளைக்கொடி கதையின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கடும் அழுத்தம் கொடுத்து பின்னர் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை வாபஸ் பெற்றது "என அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.
"எதிர்க்கட்சி, புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் மாத்திரமே ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கை இழந்தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றனர்.
ஆடைத்தொழிற் துறையில் வேலை வாய்ப்பு பெற்ற கிராமிய இளைஞர் யுவதிகளே இதனால் பாதிப்படைவர். சில மில்லியன் யூரோக்களுக்காக நாட்டின் இறைமையையும் சுயமரியாதையையும் ஒருமைப்பாட்டையும் விட்டுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை" எனவும் அவர் கூறினார். Pix: Nisal Baduge
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
39 minute ago
55 minute ago
1 hours ago