Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்)
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் தாண்டியடியில் உள்ள பாடசாலை மாணவிகளுடன் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியரை மீண்டும் அப்பாடசாலைக்கு நியமிக்கக் கூடாது என அப்பாடசாலையின் பெற்றோர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.இ.போலுடன் தான் தொடர்பு கொண்டதாக அரியநேத்திரன் தெரிவித்தார்.
குறித்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் வவுணதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் வழக்கு முடிவுற்ற பின்னரே தான் இது குறித்து நடவடிக்கை எடுக்கமுடியும் எனவும், இருப்பினும் தவறான முறையில் நடந்துகொண்ட ஆசிரியரை அப்பாடசாலைக்கு மீண்டும் நியமிக்கமாட்டோம் என தன்னிடம் வலயக்கல்விப் பணிப்பாளர் உறுதியளித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அரியநேத்திரன், மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது தவறாகும். எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள தாண்டியடி பாடசாலை மாணவிகளுடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆசரியரை மீண்டும் அப்பாடசாலைக்கு நியமிக்கக் கூடாது என என்னிடம் பெற்றௌர் முறைப்பாடு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து வலயக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்புகொண்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். கடந்த 10ஆம்திகதி வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த ஆசிரியருக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார் அரியநேந்திரன்.
1 hours ago
2 hours ago
4 hours ago
junaideen-pottuvil Friday, 20 August 2010 06:58 PM
குற்றம் நெருபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்க வேண்டும்.
Reply : 0 0
xlntgson Friday, 20 August 2010 09:11 PM
கசைஅடி கூட இல்லாத நாட்டில் மரணதண்டனை பற்றி சிந்திக்க முடியாது ஆனால் ஆசிரியர்களுக்கு எதிராக இம்மாதிரியான குற்றச்சாட்டுக்களை சாட்டி அவர்களை அவமானப்படுத்தி தற்கொலை செய்து கொள்ள தூண்டும் சந்தர்ப்பம் இல்லாமல் இல்லை. குற்றச்சாட்டு ஒன்றே போதும் எல்லாரும் நம்புவதற்கு ஆகவே மேற்கத்திய மயம் சம்பூர்ணமாக பின்பற்றாதவரை இம்மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு சாட்சி சொல்ல ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்பது உறுதி.காயடிக்கும் சட்டத்தை அமெ. மாநிலங்கள் சில கொண்டிருக்கின்றன.அரபுநாட்டு சட்டம் சொல்லத்தேவை இல்லை அறிந்ததே!
Reply : 0 0
xlntgson Saturday, 21 August 2010 08:54 PM
குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சாட்சி சொல்ல ஒருவரும் இருக்க மாட்டார்கள். நெருப்பில்லாமல் புகையாது என்று கூறி முறைப்பாட்டாளரின் கூற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சட்டம் செய்யப்பட்டிருப்பதை அறிந்து வகுப்புகளில் தனிமையை தவிர்க்க வேண்டும். நான் பாடம் கொடுக்கும் போது வீட்டுக்கு வெளி முன்றல் தாழ்வாரங்களை கூட தேர்ந்தெடுத்துக்கொண்டு இருக்கின்றேன். சற்றே சத்தம் இருந்தாலும் பரவாயில்லை என்று கூட்டு வகுப்புகள் கேலி நையாண்டி, வகுப்பொழுங்கை ஏற்படுத்துவதிலேயே நேரம் கழியும். கல்வியும் பிரச்சினை ஆகிவிட்டது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago