2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

பான் கீ மூனிடம் ஜனாதிபதி ஆட்சேபம் தெரிவிப்பார்

Super User   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜமீலா நஜ்முதீன்)

இலங்கை தொடர்பாக ஆலோசனை கூறுவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர் குழுவொன்றை நியமித்தமை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சேபத்தை நேரில் தெரிவிக்கவுள்ளார்.

ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கிற்குச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, செப்டெம்பர் 23 ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார். 24 ஆம் திகதி ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகத்தை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க வட்டாரங்கள் டெய்லி மிரர் இணையத் தளத்திற்குத் தெரிவித்தன.  

அச்சந்திப்பின் போது இலங்கை விவகாரம் தொடர்பாக தனது கடும் ஆட்சேபனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பார் என அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

அதேவேளை, இலங்கை தொடர்பான வேறு விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--