2025 ஜூலை 07, திங்கட்கிழமை

முறிகண்டி கோவில் காணியில் பிரதம கட்டிடம் எதையும் கட்டவில்லை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

முறிகண்டி கோவில் தர்மகர்த்திடம் ஒப்படைக்கப்பட்ட வேண்டும் எனக்கோரும் உரிமை மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுக்கப்பட்டது. முதலாவது பிரதிவாதியான பிரதமரும் பௌத்த மற்றும் சமய விவகார, அமைச்சருமான டி.எம். ஜயரட்ணவோ அல்லது இரண்டாம் பிரதிவாதியாக இந்து கலாசார அமைச்சோ கோவில் காணியில் கட்டிடம் எதையும் கட்டவில்லையென சிரேஷ்ட அரச வழக்கறிஞர் நீதிமன்றம் தெரிவித்தார்.

சிரேஷ்ட அரச வழக்கறிஞரான ராஜிவ் குணதிலக, பிரச்சினைக்குரிய காணி கோவில் சொத்துள் அடங்குமா என்றும் அதில் கட்டிடம் ஏதும் கட்டப்படுகின்றதா என்றும் விசாரணை நடத்த உதவி செய்வதாக கூறினார். இதே முயற்சிக்கு தானும் உதவி செய்வதாக மனுதாரர் சார்பில் ஆஜரான எம்.ஏ சுமந்திரன் அறிவித்தார்.

வழக்கு ஒக்டோபர் 5 அம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது, மனுதாரர், தனது மனுவில், விடுதலைப் புலிகள் முறிகண்டி பிள்ளையார் கோவிலை தமது நிர்வாகத்துள் கொண்டு வந்து கோவில் வருமானம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டதாக கூறினார். இலாப நோக்குடன் கட்டுப்பாடில்லாத வகையில் பல வியாபார நிலையங்கள் தோன்றி கோவிலின் புனிதத்துக்கு பங்கம் விளைவித்தன எனவும் கூறினார்.

தற்போது கோவில், இந்து கலாசார அலுவலகங்கள் திணைக்களங்கள் கொண்டுவரப்பட்டு கோவிலில் சேரும் பணம் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படுவதாக அவர் மனுவில் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .