2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கல்முனை சிறைக்கூடத்தின் பொறுப்பதிகாரி இடைநிறுத்தம் மூவருக்கு இடமாற்றம்

Super User   / 2010 செப்டெம்பர் 24 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

கல்முனை சிறைக்கூடத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவர் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் சிறைக்கூட உத்தியோகத்தர்கள் மூவருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிறைச்சாலை ஆணையாளருக்கு இலங்கை சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் சி.ஆர்.டி.சில்வா அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 2ஆம் திகதி மாலை அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு கைதிகள் இருவரை கொண்டுசென்று தனியார் வான் ஒன்றில் கல்முனை சிறைக்கூடத்துக்கு கொண்டுவரும் வழியில் இரு கைதிகள் அட்டாளைச்சேனை,பாலமுனை பள்ளிவாயலுக்கு அருகில் வைத்து கைவிலங்குகளுடன் தப்பிச்சென்றனர்.

இக் கைதிகளை கல்முனை சிறைக்கூடத்தில் இருந்து நீதிமன்றுக்குக்கு கொண்டு செல்லும்போது   பொறுப்பதிகாரி உட்பட உத்தியோகஸ்தர்கள் நால்வரும் கைதிகளுடன் சென்றிருந்தனர்.

இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், மேற்படி பொறுப்பதிகாரிக்கு காலவரையறையின்றி பணியிலிருந்து  இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் மறு அறிவித்தல் வரும்வரை ஏனைய மூன்று சிறைக்கூட உத்தியோகஸ்தர்களுக்கும் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் மட்டக்களப்பு சிறைக்கூடத்துக்கு இடமாற்றம்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X