2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

விளம்பரங்களைக் கண்காணிக்க விசேட குழு

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரங்களின் சட்டபூர்வ தன்மை குறித்து அவசியம் ஏற்படின் விசாரிப்பதற்காக விசேட மோசடி புலனாய்வு பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மோசடிப் புலனாய்வுப் பணியகத்தின் தலைவரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மைக் புரொக்டர் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை மோசடியாளர்கள் ஏமாற்றுவதைத் தடுக்கும் நோக்குடன் இப்புலனாய்வுப் பிரிவினர் விளம்பரங்கள் குறித்த தகவல்திரட்டை தொகுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

'சட்டவிரோத கடன்கள், வாகன விற்பனை, காணி விற்பனை, சந்தேகத்திற்கிடமான தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொலைக்காட்சி பத்திரிகைளில் வெளியாகும் அனைத்து சந்தேகத்திற்கிடமான விளம்பரங்களளும் கண்காணிக்கப்படும்.

இதன் மூலம், விளம்பரங்கள் அடிப்படையிலான சட்டவிரோத நடவடிக்கைகளை குறைத்து பொதுமக்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்' என அவர் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X