2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பியகம பஸ் விபத்தில் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே மரணம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.எம்.பௌஸான்)
 
பியகம சுதந்திர வர்த்தக வலய வளாகத்தின் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் மீது சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டி மோதியதில் ஸ்தலத்திலேயே அப்பெண் பலியான சம்பவம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
 
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் தனியார் நிறுவனமொன்றில் தொழில் புரியும் வலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த எச்.பீ.இனோகா சுதர்சினி (34) என்ற 3 பிள்ளைகளின் தாய், நேற்றைய தினம் வேலைக்கு செல்வதற்காக சுதந்திர வர்த்தக வலய வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோதே பஸ்ஸில் மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
 
குறித்த விபத்து சம்பவத்தை அடுத்து பஸ்ஸை கைப்பற்றிய பியகம பொலிஸார், பஸ்ஸின் சாரதியையும் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .