Super User / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்படட் இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் சட்டவிரோத குடியேற்ற – ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்பானவர்கள் என தாய்லாந்து பொலிஸாரும் அந்நாட்டு ஊடகங்களும் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கனேடிய குடியவரவு அமைச்சர் ஜேஸன் கென்னி, கியூ.எம்.ஐ. செய்திச்சேவையிடம் பேசுகையில். 'மனிதக்கடத்தல் திட்டமொன்றினூடாக கனடாவுக்கு வருவதற்காக தாய்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை தாய்லாந்து கைது செய்ததை நாம் அறிவோம்' என்றார்.
எம்.வி.சன் ஸீ கப்பல் மூலம் 491 இலங்கையர்கள் கனடாவுக்குச் சென்றதையடுத்து தாய்லாந்து மற்றும் அப்பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடனான ஒத்துழைப்புகளை கடந்த கோடைக்காலத்தில் கனேடிய அரசாங்கம் அதிகரித்திருந்தது. எம்.வி.சன் ஸீ கப்பல் தாய்லாந்திலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் "கனடா இப்பிராந்தியத்தில் பொலிஸ் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது" என கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேஸன் கென்னி கூறியுள்ளார்.
20 minute ago
8 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
8 hours ago
05 Nov 2025