2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை தவிர்க்க பயிற்சி மையங்கள் அமைக்க திட்டம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 06:17 - 1     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அரசாங்க பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் வகையில் மாவட்ட அடிப்படையில் ஆங்கில ஆசிரியர் பயிற்சி மையங்களை அமைக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.குணசேகர தெரிவித்தார்.

இப்பயிற்சி மையங்களை அமைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் கற்பித்தல் வளவாளர்களையும் இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் அதற்கான உடன்படிக்கையில் கல்வி அமைச்சும் இந்திய அரசாங்கமும் கைசாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுள் ஆங்கிலத்தை கற்பிக்கக்கூடிய ஆற்றல் உள்ள ஆசிரியர்களை இனங்கண்டு 6 மாத காலத்திற்கு துரித பயிற்சிகளை வழங்கி ஆங்கிலம் கற்பிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் 20 ஆங்கில பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. பெரும்பாலும் கல்விக் கல்லூரிகளில் ஆசிரியர் கலாசாலைகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் என்பவற்றை மையமாகக் கொண்டே இப்பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 1

  • சுந்தரி Sunday, 10 June 2018 07:04 PM

    இந்த பயிற்சியில் சேர விரும்புகிறேன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X