2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

லியாம் பொக்ஸின் இலங்கை விஜயம் பிற்போடப்பட்டது

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானிய பாதிகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸின் இலங்கைக்கான விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக தி கார்டியன் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

தனிப்பட்ட ரீதியில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்த லியாம் பொக்ஸ், கல்ப்புக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொக்ஸின் தனிப்பட்ட ரீதியிலான விஜயம் தற்பொது பிற்போடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 2011ஆம் ஆண்டில் அவர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என்றும் பாதுகாப்பு செயலாளரின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த சொற்பொழிவாற்றுவதற்காக இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை இவ்வார இறுதியில் மேற்கொள்ள லியாம் பொக்ஸ் தீர்மானித்திருந்தார்.

எனினும், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதன் மூலம் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு லியாம் பொக்ஸ் சவால்விடுக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டருந்தது.

இந்த நிலையிலேயே லியாம் பொக்ஸின் இலங்கைக்கான விஜயம் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X