Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 19 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு கிழக்கில் நன்கொடையாளர்களின் மானியங்கள் மற்றும் கடன்களின் மூலம் புதிய கட்டிடங்களை நிர்மாணிக்கும் திட்டங்கள் டிசெம்பர் 9 ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டுள்ளன.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் இப்பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்பார்வை செய்யும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, தற்போதுள்ள கட்டிங்களை புனரமைப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பணிப்புரை விடுத்துள்ளார்.
நெல் மற்றும் ஏனைய விவசாய உற்பத்திகளை களஞ்சியப்படுத்துவற்கான கட்டிடங்கள் மாத்திரமே விதிவிலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜபக்ஷவின் பணிப்புரையை இது தொடர்பான சகல அமைச்சுகள் மற்றும் இம்மாகாணங்களிலுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு அமைச்சின் மேலதிக செயலாளர் நிஹால் சோமவீர அறிவித்துள்ளார். இத்தீர்மானத்திற்கான காரணம் கூறப்படவில்லை.
வடக்கு கிழக்கில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் ஒரு பகுதியாக கட்டிடங்களை அமைப்பதற்கு நிதி வழங்க முன்வந்த உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பானிய முகவரம் ஆகியனவற்றின் உள்ளுர் அலுவலகங்களுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
களஞ்சியசாலைகள் தவிர்ந்த ஏனைய கட்டிடங்களை அமைப்பதற்கான விதிவிலக்கான தேவைகள் இருப்பின் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் சம்மதத்தைப் பெறவேண்டும் எனவும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இத்தீர்மானத்தால் இந்திய நிதியுதவியுடன் 50000 வீடுகளை அமைக்கும் திட்டம் பாதிக்கப்படுமா என்பது உடனடியாக தெரியவில்லை.
(சண்டே டைம்ஸ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
56 minute ago
3 hours ago
4 hours ago