Super User / 2011 மார்ச் 01 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள லிப்டன் சுற்றுவட்டம் மற்றொரு தஹ்ரிர் சதுக்கமாக மாற்றப்படும் என ஜேவி.பி. கூறியுள்ளது.
எகிப்திய தலைநகர் கெய்ரோவிலுள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களையடுத்து அந்நாட்டு ஜனாதிபதி பதவியிலிருந்து ஹொஸ்னி முபாரக் விலகியமை குறிப்பிடத்தக்கது.
பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக இன்று கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ஜே.வி.பி தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, நாட்டின் முதலாளித்துவ அடிப்டையிலான பொருளாதாரத்தை மாற்றும் போராட்டமொன்றை ஜே.வி.பி. ஆரம்பிக்கும் எனத் தெரிவித்தார்.
"பொருளாதார சுமைகளை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். நாட்டின் வடக்கிலிருந்து தெற்குவரை கிழக்கிலிருந்து மேற்குவரை அது உணரப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மக்களை பொறுமையாக இருக்கும்படி அரசாங்கம் கூறுகிறது' என அவர் கூறினார்.
ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வா உரையாற்றுகையில், இந்த அரசாங்கம் விடைபெறும் காலம் வந்துவிட்டது என்றார். எகிப்து, லிபியா போன்ற நிலை இங்கு வராது என ஆட்சியாளர்கள் நினைத்தால் அது தவறு மக்களின் எழுச்சிக்கு முன்னால் எந்த அதிகாரமும் தாக்குப்பிடிக்க முடியாது என அவர் கூறினார். (யொஹான் பெரோ, நபீலா ஹுஸைன்)
5 minute ago
34 minute ago
1 hours ago
Raja Wednesday, 02 March 2011 07:30 PM
சும்மா சொல்லாதிங்க, முடிஞ்சா செய்து பாருங்க...
Reply : 0 0
xlntgson Thursday, 03 March 2011 08:37 PM
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
34 minute ago
1 hours ago