2021 மார்ச் 08, திங்கட்கிழமை

இலங்கை நீதித்துறை; ஐ.நா அதிருப்தி

Menaka Mookandi   / 2013 ஜனவரி 01 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை மற்றும் சட்டத்தரணிகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் மீதான ச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன என்றும் அவர்களின் நடவடிக்கைகள் மீது அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன என்றும் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கெப்ரில்லா நோல் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. அது களையப்பட்டு நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட வேண்டும். 2003ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் இணங்கிக்கொண்டபடி இலங்கையின் நாடாளுமன்ற நிலையியற் கட்டளை முரண்பாட்டை கொண்டிருக்கிறது.

எனவே பிரதம நீதியரசர் ஒருவர் மீது விசாரணை நடத்துவதற்கு ஒரு சுயாதீனமான குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் கடைப்பிடித்து, நீதித்துறை யாரினதும் தலையீடின்றி செயற்படுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று கெப்ரில்லா நோல் கோரிக்கை விடுத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .