2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ஹிஜாப் உடையில் கைதான இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 07 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியிலுள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளையில் கொள்ளையடிப்பதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் இராணுவ உயர் அதிகாரியை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிஜாப் உடை அணிந்திருந்த இந்த இராணுவ உயர் அதிகாரி விளையாட்டு துப்பாக்கி மற்றும் கத்தியுடன் நேற்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் பெண் போன்று பாசாங்கு பண்ணிய இவரை  வங்கியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கொத்மலையில் பணியாற்றும் இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். சந்தேகநபரை பொலிஸார் கண்டி நீதிமன்றம் நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்ற நீதவான் ரவீந்திர பிரேம ரத்ன உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .