2020 நவம்பர் 28, சனிக்கிழமை

இலங்கை விவகாரத்தில் இந்தியா தர்மத்தின் பக்கம் இருக்க வேண்டும்: விஜயகாந்த்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 19 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்தின் மீதான போர்க்குற்ற விவகாரங்களில் இந்திய அரசு எப்போதும் போல் இலங்கை அரசின் பக்கம் இல்லாமல் தர்மத்தின் பக்கம் இருந்து செயற்பட வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

'இலங்கை அரசாங்கத்தின் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு அவ்வரசாங்கம் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 

இந்த புகைப்படங்கள் உண்மையானவை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இலங்கை மண்ணில் பிறந்த சிறுவனை அந்நாட்டு அரசாங்கமே கொடூரமாக படுகொலை செய்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்' என்றும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

'இந்திய அரசு எப்போதும்போல் இலங்கை அரசின் பக்கம் இல்லாமல் இனியாவது தர்மத்தின் பக்கம் இருக்க வேண்டும்' என விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--