2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ஜம்இயதுல் உலமாவுடன் பேச உப குழு தீர்மானம்?

Kanagaraj   / 2013 பெப்ரவரி 19 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

ஹலால் விவகாரம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உப குழு தீர்மானித்துள்ளது என நம்பந்;தத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏதிர்வரும் வியாழக்கிழமை அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது எனவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

மத விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் கூட்டம் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க தலைமையிலான இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர்களான  சுசில் பிரேம்ஜயந்த, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, மைத்திரபால சிறிசேன, ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பெளசி, ரிஷாத் பதியுதீன், அதாவுல்லாஹ்இ தினேஸ் குணவர்தன மற்றும் சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர ஆகிய யோர்  இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஹலால் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டதாகவும் தொடர்ந்தும் அடுத்து வரும் நாட்களில் இந்த குழு கூடி இது விடயமாக கலந்துரையாடவுள்ளது.

ஹலால் மாத்திரமல்லாது மத விவகாரம் தொடர்பிலான பல விடயங்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மதங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.

இந்த குழுவின் இறுதி அறிக்கையை அவசரமாக தயாரிக்க முடியாது. பல தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி அறிக்கை தயாரிக்க முடியும். தற்போது ஆரம்பக் கட்ட பணிகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சரொருவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .