2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

புகலிடகோரிக்கையாளர்கள் படகு விபத்தில் நால்வர் பலி

Kanagaraj   / 2013 ஜூலை 24 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகலிட  கோரிக்கையாளர்களை அஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்குபேர் பலியாகியுள்ளனர்.

மோசமான வானிலை காரணமாக இந்தோனேஷியாவின் ஜாவா தீவுக்கு அருகில் குறித்த படகு கடலில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

என்றும், தத்தளித்தவர்களில் 150 க்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன.

பலியானவர்களில் இருவர் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை, ஈராக், ஈரான், மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்படகில் பயணித்ததாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .