2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

உணவு பாதுகாப்பு வாரத்தில் கடைகளை சோதிக்க திட்டம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 21 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவு பாதுகாப்பு வாரத்தின்போது உணவு மற்றும் மென்பானங்களை விற்பனை செய்யும் கடைகள் மீது சோதனை நடத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த ஒரு வார காலத்தின்போது விசேடமான சோதனைகளை நடத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கும், சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கும் ஏனைய சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

போத்தலில் அடைத்த நீர் உற்பத்தியாளர்களுக்கு விசேட வழிகாட்டல்களை அறிமுகம் செய்வதும் இவ்வாரத்துக்கென திட்டமிடப்பட்டுள்ள ஒரு நடவடிக்கையாகும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. உணவு பாதுகாப்பு வாரம் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--