2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

கத்திக்கு பாதுகாப்பா: சாமி கேள்வி

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கத்தி படத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளதாக தனக்கு கிடைத்த தகவல் உண்மையா என பாரதீய ஜனதா கட்சியின்  தலைவர் சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய்யின் கத்தி படத் தயாரிப்பாளர் பிரச்சினையால் படாதபாடு படுகிறது. கத்தி தமிழகத்தில் 400 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

ஆனால், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர் என்பதால் அப்படத்தை திரையிட சில தமிழ் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

 கத்தி படத்திற்கு பாதுகாப்பு அளிப்பது என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது தான் எனக்கு தகவல் கிடைத்தது.
அதனால் கத்தி பட முன்பதிவு இன்று காலை ஆரம்பமாகுமாம்.இது உண்மையா என்று அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X