2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

வெற்றி உறுதி: மஹிந்த நம்பிக்கை

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 17 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே முன்னிலையில் உள்ளதாகவும் இதன்மூலம் தமது கட்சிக்கு 117 ஆசனங்கள் கிடைக்கும் என்று கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ  வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்த மஹிந்த ராஜபக்ஷ, அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'நாம் முன்னிலையில் இருக்கின்றோம். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். நாடு முழுவதும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரித்தேன். எல்லாப் பக்கங்களிலிருந்தும் நல்ல தகவல் கிடைத்தது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .