2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

சுசில், அநுரவுக்கு எதிரான மனுக்கள் வாபஸ்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 27 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருக்கு இடைக்காலத் தடை கோரி, அக்கட்சிகளின் புதிய பொதுச் செயலாளர்களால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் இன்று (28) வாபஸ் பெறப்பட்டன.

ஐ.ம.சு.கூ.வின் புதிய பொதுச் செயலாளர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால மற்றும் சு.க.வின் புதிய பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க ஆகியோராலேயே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தங்களால் தற்போது எவ்விதத் தடையுமின்றி கடமைகளை முன்னெடுக்க முடிவதாகக் கூறியே விஷ்வ வர்ணபால மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோரால், இன்று அவ்விரு மனுக்களும் வாபஸ் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X