2026 ஜனவரி 03, சனிக்கிழமை

‘7 தாய்மார் உயிரிழப்பு’

வி.சுகிர்தகுமார்   / 2017 டிசெம்பர் 11 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில், 300 நாட்களையும் தாண்டிய நிலையில் உண்ணாவிரதம் இருக்கும் உறவுகளுக்கு, அரசாங்கம் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை. அவர்களில் 7 தாய்மார் இறந்துள்ளனர்.

அவர்கள் இறக்கும்போது கூட, எனது கணவர், பிள்ளைகள் எப்போது வருவார்கள் எனும் கேள்வியுடனேயே இறந்துள்ளனர்” என, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி மு.செல்வராணி கேட்டுக்கொண்டார்.  

“சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவதில் அர்த்தமில்லை. நீதிகோரும் சகோதரிகளாக நாம் ஒன்றிணைவோம். பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்த ஏற்புடைய நடவடிக்கையை எடுங்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

“இன்று அரசாங்கம், தென்பகுதியில் நடைபெறுகின்ற வெள்ளம், குப்பைமேடு போன்ற அனர்த்தங்களுக்கெல்லாம் உடனடி தீர்வைக் காணுகின்றது. ஆனால் எங்களுக்கான தீர்வை இழுத்தடிக்கின்றது. நாம் எல்லோரும் அரசாங்கத்தின் பிள்ளைகளே என்பதை அரசாங்கம் உணரவேண்டும். அடுத்த அரசாங்கம் எப்படி அமையும் என எங்களுக்கு தெரியாது. ஆகவே நல்லாட்சி அரசாங்கம், ஒரு சிறந்த தீர்வை எங்களுக்கு வழங்க வேண்டும்.  

“அத்தோடு சர்வதேச சமூகமும் எங்களைக் கண்கொண்டு பார்க்க வேண்டும். அதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டுபிடிப்பதற்கான அலுவலகம் கொழும்பில் திறக்கப்பட்டாலும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை” என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X