2025 டிசெம்பர் 06, சனிக்கிழமை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கமெராக்கள்

Super User   / 2011 நவம்பர் 17 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ரிக்கெட்  விற்பனை மற்றும் வேகக்கட்டுபாட்டு மீறல்களை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்படவுள்ளன.

கொட்டாவையிலிருந்து காலி மாவட்டத்தின் பின்னதுவ வரையிலான இவ்வீதியிலுள்ள  8 நுழைவாயில்களிலும்  ; இக்கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்படவுள்ளன.

கொட்டாவையிலிருந்து காலி மாவட்டத்தின் பின்னதுவ வரை 8 இடங்களில் இக்கண்காணிப்பு கமெராக்கள் பொருதப்படவுள்ளன.

மணித்தியாலத்திற்கு 100 கி.மீ. வேக எல்லையை மீறும் சாரதிகளை கண்டறியவும்  இக்கமெராக்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவுக்கு உதவும்.

நவம்பர் 27 ஆம் திகதி இவ்வீதி திறக்கப்படவுள்ள நிலையில் நாட்டின் நெடுஞ்சாலைகளின் பாவனையாளர்களுக்காக 1989 எனும் புதிய துரித தொலைபேசி சேவையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

விபத்துச்சேவை, தீயணைப்பு படையினர், அம்பியூலன்ஸ் மற்றும் பொலிஸ் சேவைகளை பெற்றுக்கொள்ள இத்துரித தொலைபேசி இலக்கம் உதவும். சுமார் 500 உத்தியோகஸ்தர்களுடன் நவீன கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஜீப்கள் அம்பியூலன்ஸ், பௌஸர்கள் ட்ரக் வண்டிகள், தீயணைப்பு வாகனங்கள் என்பவற்றைக்  கொண்டதாக இப்பிரிவு இயங்கவுள்ளது.

சில விநாடிகளில் 100 கிலோமீற்றர் வேகத்தை அடையக்கூடிய சுபாரு கார்களையும் ரோந்து நடவடிக்கைகளுக்காக பொலிஸ் திணைக்களம் இறக்குமதி செய்துள்ளது.

சாதாரண போக்குவரத்துச் சட்டங்களைவிட அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து விதிகள் வித்தியாசமானவை என்பதால் விசேட போக்குவரத்துப் பிரிவு அவசியமாகவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0

  • mbm Friday, 18 November 2011 10:11 PM

    ரோட்டும் வந்துச்சு! ரோட்டுக்கு போலிசும் வந்துச்சு! ஆரம்ப காலங்களைவிட இப்போ விபத்து கூடுதலாக நடக்குது! அப்போ தப்பு எங்கோ இருக்குது! கொஞ்சம் தேடிப்பாருங்க பொலிசாரே...

    Reply : 0       0

    hassanqs Thursday, 24 November 2011 04:56 PM

    நன்றி நன்றி நன்றி போதுமா .............

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X