2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கடற்படை - இளைஞர் குழு மோதல்; அறுவர் காயம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 12 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலபிட்டிய, பண்டாரவத்தை கடற்கரைப் பிரதேசத்தில் கடற்படையினருக்கும் பிரதேச இளைஞர் குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் கடற்படையினர் மூவர் உட்பட அறுவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையினரே தங்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தியதாக இளைஞர் குழு தெரிவிக்கின்ற அதேவேளை, இளைஞர்களே தங்கள் மீது ஆரம்பத்தில் தாக்குதல் நடத்தியதாக பலப்பிட்டிய கடற்படை முகாம் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .