2021 ஜனவரி 20, புதன்கிழமை

அநாதரவாக மீட்கப்பட்ட சிறுவர்களின் தந்தை கைது

Kanagaraj   / 2012 டிசெம்பர் 31 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம பிரதேசத்தில் அநாதரவாக இருந்த நிலையில் மீட்கப்பட்ட மூன்று சிறுவர்களின் தந்தையை கைது செய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு, எட்டு மற்றும் பத்து வயதான மூன்று சிறுவர்களே இவ்வாறு நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.

கடும் மழைக்கு மத்தியில் மேற்படி மூன்று சிறுவர்களும் அழுதுகொண்டு நின்ற நிலையில் இது தொடர்பில் பெண்ணொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அச்சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த சிறுவர்களின் தந்தையை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மூன்று பிள்ளைகளின் தாயை தேடி வலைவிரித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை, அநாதரவான பிள்ளைகளின் பெற்றோருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கே இருப்பதாக அதன் பணிப்பாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .