Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 04 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்,ஆர்.அனுருத்தன்)
உலகெங்கிலும் தீபத்திருநாளாம் தீபாவளியை கொண்டாடுகின்ற அனைத்து மக்களுக்கும் எனது தீபத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இவ்வாறு தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மேலும் அவரது தீபாவளி வாழ்த்துச் செய்தியில்,
'தீபாவளிப் பண்டிகையானது உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும்
சிறந்த தத்துவத்தை எடுத்தியம்புகின்றது. கிருஷ்ண பரமாத்மா, தீமையின் முழு உருவமான நரகாசூரனை வதம் செய்து மக்களின் வாழ்வில் ஒளியேற்றினார் என்பது இதிகாசங்கள் கூறும் நிகழ்வாகும். கிருஷ்ண பரமாத்மா நரகாசூரனை வதம் செய்யும்போது அழிக்கப்பட்டது நரகாசூரன் மாத்திரமல்ல. நரகாசூரனுடன் சேர்ந்து வஞ்சகம், பொறாமை போன்ற தீய குணங்களும்.
இன்றைய காலகட்டத்தில் உலகமெங்கிலும் இத்தத்துவம் மிக வேண்டப்பட்டதாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள தீயகுணங்கள் வதம் செய்யப்படும்போது தான் இத்தீபத்திருநாளின் மகிமையை எம்மால் உணர முடிகிறது.
எமது நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டியது எமது கடமையாகவுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து நிம்மதியான வாழ்வை வாழும்போது தான் இத்தீபத் திருநாளின் யதார்த்த பூர்வமான தத்துவம் உயிர்வாழும் என்பதில் ஐயமில்லை.
எனவே, தீபத் திருநாளை கொண்டாடும் அனைவரும் இதன் யதார்த்தத்தை உணர்ந்துகொண்டவர்களாகவும் இதனை ஒரு பட்டாசு வெடிக்கும் பண்டிகையாக கருதாது இருக்க வேண்டும். இதன் உட்தத்துவத்தை ஒவ்வொருவரும்; தமது வாழ்வில்
கடைப்பிடிப்பதன் ஊடாக முழு நாட்டிலும் நிலையான சமாதானமும் சகவாழ்வும் ஏற்படும் என திடமாக நம்பலாம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
31 minute ago
1 hours ago