2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

இன்றும் நாளையும் ரெலோவின் 9ஆவது தேசிய மாநாடு

Princiya Dixci   / 2016 மார்ச் 19 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 9ஆவது தேசிய மாநாடு, இன்று சனிக்கிழமையும் (19) நாளை ஞாயிற்றுக்கிழமையும் (20) திருகோணமலையில் இடம்பெறவுள்ளதாகக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் சர்வதேச நாடுகளில் வசிக்கும் 175 பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.  

இம்மாநாட்டில் பொதுக்குழு உறுப்பினர்களிலிருந்து மத்திய குழு, தலைமைக்குழு மற்றும் அரசியல் குழு ஆகியவற்றிற்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

இன்றைய (19) மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களையும் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்களையும் தெளிவுபடுத்தும் கூட்டம், நாளை (13) பிற்பகல் 03 மணியளவில் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

இதில் தமிழ் மக்கள் பங்கேற்று மாநாட்டை சிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இம் மாநாட்டில் கட்சியின் கட்டமைப்பு தீர்மானங்களுடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வட மற்றும் கிழக்கு மீள் குடியேற்றம், இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள், வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டிருக்கும் பட்டதாரிகள், தொண்டர் ஆசிரியர் பிரச்சினை மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

இம் மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக கட்சியின் தலைவரும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X