2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

இராணுவத்தினர் சுட்டனர்; கிளிவெட்டி படுகொலை வழக்கில் சாட்சியம்

Kanagaraj   / 2016 ஜூலை 08 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

'தனலெட்சுமி என்பவரும் நானும்  கிளிவெட்டிக்கு ரியூசனுக்கு சென்றுகொண்டிருந்தபோது,  இராணுவத்தினர் சுட்டுக்கொண்டே வீதியால் வந்தார்கள். இதன்போது, அருகில் இருந்த முத்து அண்ணனின் கடைக்குள் சென்று நான் ஒழிந்தேன். என்னோட வந்த தனெலெட்சுமியும்; மேலும் பலரும் சுடப்பட்டு இறந்ததை நான் நான் பின்னரே அறிந்தேன்' என  ஜோசப் மோசஸ் அன்ரனி (வயது 30) என்பவர் சாட்சியமளித்தார்.

திருகோணமலை, கிளிவெட்டிப் பிரதேசத்தில் 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதியன்று பொதுமக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில்  நடைபெற்றுவருகின்றது.

ஜூரிகள் சபையின் முன்னிலை, எட்டாவது நாளாக நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசாரணையின்போதே  அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.  

இன்றைய விசாரணைக்காக  சம்பவத்தைக் கண்டவர்கள் மற்றும் காயப்பட்டவர்கள் அழைக்கப்பட்டனர். இதன்படி பத்து பேர் சாட்சியமளித்தனர்.  

இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர், 'சம்பவம் நடந்தபோது எனக்கு பத்து வயது. என்னோடு வந்த அருமைத்துரை தனலெட்சுமிக்கு பதினாறு வயது. இருவரும் சைக்கிளில் பாரதிபுரம் கிராமத்தில் இருந்து ரியூசனுக்கு போய்வந்தனாங்க . என்னை தனலெட்சுமி ஏற்றி செல்வார். அன்றையதினம் நாம் வீடுவர நேரம் சற்று தாமதமாகிவிட்டது. அப்போது குமாரபுரம் பகுதியில் நாம் வரும்போது இராணுவத்தினர் வெடி சுட்ட வண்ணம் ஓடிவந்தனர்.

அதைக்கண்ட நாங்கள் பயத்தின் காரணமாக வீதிக்கருக்கில் இருந்த தேனீர் கடையான முத்து அண்ணனின் கடைக்குள் சென்றோம். என்னுடன் மேலும் பலரும் சென்றனர.; பின்னர் இராணுவத்தினர் சுற்றி நின்று கூப்பிட்டனர். பலர் வெளியே போனார்கள.; ஆனால் நான் போகவில்லை. உள்ளே புகுந்து படுத்துவிட்டேன். அப்போது இராணுவத்தினர் சுட்ட வெடியெல்லாம் எனது காலில் பட்டது. இதனால்  வெடிசத்தம் மற்றும் காயம் காரணமாக நான் மயங்கி விட்டேன்.

பின்னர் அடுத்த நாள் தான் தெரிந்தது என்னை ஏற்றி வந்த  அருமைத்துரை தனலெட்சுமியும் கெடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று. அத்துடன் கிராமத்தில் பலர் கொலை செய்யப்பட்டார்கள் என்றும் தெரியவந்தது.  எனது கால் காயத்தை ஆற்ற நான் பின்னர் மிகுந்த சிரமப்பட்டேன். ஆனாலும் அது முறையாக சீராக வில்லை' என்றார்.

இவருடன்  மாரிமுத்த மகேஸ்வரன்(58),மகேஸ்வரன் சுகந்தினி (24),ஜே.ஜெயநாதன்(46),? சிவகுணம் புவிதரன்(42),இராசதுரை  சத்தியபாமா(37),கணபதிப்பிள்ளை குமதினி(45) நந்தகோபால் நாக நந்தினி (32), அழகுதுரை புவனேந்தினி 23),திருப்பதி மஞ்சுளாதேவி (24) என்பவர்களும் சாட்சியமளித்தனர். பலர் காயம்பட்டதுடன் பலர் நேரடியாக சம்பவங்களைக்கண்டவர்களுமாக இருந்தனர.; மேலும் 13 பேருக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விசாரணைகளில் கிளிவெட்டி நெல் சந்தைப்படுத்தல் கட்டிடத்திலஹெலிகொப்டரில்  இராணுவத்தினர் வந்து இறங்கியதை தாம் கண்டதாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .